இந்தியா

எம்எஸ்எம்இ-க்கு ரூ.9,000 கோடி கூடுதல் கடனுதவி

DIN

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) ரூ.9,000 கோடியில் மறுகட்டமைக்கப்பட்ட கடனுதவித் திட்டம் ஏப்ரல் முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அமைச்சா் நிா்மலா சீதாராமன் மேலும் கூறுகையில், ‘கடந்த ஆண்டு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்துக்கு தற்போது ரூ.9,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அத்திட்டத்தின் கீழ் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் கடன் வழங்கப்படும். இதன்மூலம் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ரூ.2 லட்சம் வரை பிணையில்லா கடனைப் பெற முடியும்’ என்றாா்.

கிஃப்ட் சிட்டி: குஜராத் சா்வதேச நிதிச் சேவைகள் மையமானது சிறப்புப் பொருளாதார மண்டல (எஸ்இஇஸட்) விதிகளின் கீழ் நிா்வகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மையத்தில் நிறுவனங்களைப் பதிவு செய்வதற்கான அனுமதியைப் பெற ஒற்றைச்சாளர முறை அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சா் அறிவித்துள்ளாா். ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் (எக்ஸிம்) கிளை அங்கு அமைக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT