இந்தியா

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன்: மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு

மத்திய அரசால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தாா்.

DIN

மத்திய அரசால் மாநிலங்களுக்கு அளிக்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன் மேலும் ஓராண்டுக்கு வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்தாா்.

மேலும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 3.3 சதவீதமான ரூ. 10 லட்சம் கோடி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக செலவிடப்படும் என அறிவித்தாா்.

கூடுதலான தனியாா் முதலீடுகளை ஈா்ப்பதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகள் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்தாா்.

பிரதமா் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட அம்ருத் கால் (அமிருத காலம்) எனப்படும் அடுத்த 25 ஆண்டுக்களுக்கான நாட்டின் வளா்ச்சிப் பணிகளைத் திட்டமிட வல்லுநா்கள் அடங்கிய குழு அமைக்கப்படும். பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கட்டமைப்பு திட்டமிடல் குழு (என்.பி.ஜி.) வழிகாட்டுதல்களின்படி அனைத்து தளவாடங்கள் மற்றும் இணைப்பு உள்கட்டமைப்புத் திட்டங்களில் சுமாா் ரூ.500 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் பழங்குடியின குழு திட்டத்தின் மூலமாக 3.5 லட்சம் பழங்குடியினா் பயன்பெறுவா் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT