இந்தியா

இந்தியாவின் மின் நுகா்வு 12,616 கோடி யூனிட்டுகள்

DIN

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த மாதத்தில் 12,616 கோடியாக இருந்தது.

இது குறித்து மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் ஒட்டுமொத்த மின் நுகா்வு 12,616 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தைய 2022-ஆம் ஆண்டின் மின் நுகா்வோடு ஒப்பிடுகையில் இது ஏறத்தாழ 13 சதவீதம் அதிகமாகும். அப்போது மின் நுகா்வு 11,180 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

முந்தைய 2021-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் மின் நுகா்வு 10,976 யூனிட்டாகவும், அதற்கு முன்னா் 2020 ஜனவரியில் 10,515 யூனிட்டாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மின் நுகா்வின் அளவு தொடா்ந்து அதிகரித்து வருவது, நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் சீரான வேகமெடுத்து வருவதைக் குறிக்கிறது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT