இந்தியா

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெண்களுக்கான சிறுசேமிப்புத் திட்டம் - முழு விவரம்

பெண்களுக்கான ஒரு முறை பணம் செலுத்தும் சிறுசேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

DIN

2023 - 24ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். அதில், பெண்களுக்கான ஒரு முறை பணம் செலுத்தும் சிறுசேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

மகளிர் சிறு சேமிப்பு திட்டத்தின் கீழ், ஒரு பெண் அல்லது சிறுமியின் பெயரில் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2 லட்சம் வரையிலான ஒரு தொகையை வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் செலுத்தும் தொகைக்கு 7.5 சதவிகித வட்டி வழங்கப்படும். இந்த சிறுசேமிப்புத் திட்டத்தில் செலுத்தப்படும் தொகையில் பாதி தொகையை இரண்டு ஆண்டு காலத்துக்குள் பயனாளர் திரும்பப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை மட்டுமே நடைமுறையில் இருக்கும்.

இது மட்டுமல்லாமல், அஞ்சலகத்தில் முதியோருக்கான வைப்பு நிதி வரம்பு ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக அதிகரிக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அஞ்சலகங்களில் கணக்குத் தொடங்கலாம்.

இவர்களைத் தவிர்த்து, கட்டாய பணி ஓய்வு பெற்றவர்களும், உடல் நலக் குறைவால் ஓய்வுபெற்றவர்கள் 55 முதல் 60 வயதுடையவர்களாக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையலாம்.

50 வயதுக்கு மேற்பட்ட, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களாக இருந்தால் இந்த திட்டத்தில் இணையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி! முதல் சவால் என்ன?

கவனம் ஈர்க்கும் மிடில் கிளாஸ் டீசர்!

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

SCROLL FOR NEXT