இந்தியா

குஜராத்துக்கு பயனளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்: பூபேந்திர படேல்

மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

DIN

மத்திய அரசின் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட் என குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தினை பிரதிபலிக்கும் பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பத்திரிகையாளர்களிடன் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

பத்திரிகையாளர்களிடம் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது: மத்திய அரசின் பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர வர்க்க மக்கள், பழங்குடியினர், மூத்த குடிமக்கள் மற்றும் அடித்தட்டு மக்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியுள்ளது.

வளர்ச்சியை மையப்படுத்திய பட்ஜெட்டினை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்தியாவை தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற விரும்பும் நோக்கத்தினையும், இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற விரும்பும் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணத்தினை பிரதிபலிக்கும் பட்ஜெட்டாகவும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. குஜராத்துக்கு பயனளிக்கும் வகையிலும் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமான பஜெட்டினை வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எனது நன்றிகள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT