அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி.. எட்டாவது நாளில் 
இந்தியா

அதானி குழும பங்குகளின் வீழ்ச்சி.. எட்டாவது நாளில்

அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் இன்றும் 5 முதல் 10 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தன. அதானி குழும பங்குகள்  தொடர்ச்சியாக அதிகளவில் விற்பனைக்கு வரும் அழுத்தம் காரணமாக எட்டாவது நாளாக இந்த சரிவை அடைந்துள்

DIN

புது தில்லி : அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் இன்றும் 5 முதல் 10 சதவிகித வீழ்ச்சியை சந்தித்தன. அதானி குழும பங்குகள்  தொடர்ச்சியாக அதிகளவில் விற்பனைக்கு வரும் அழுத்தம் காரணமாக எட்டாவது நாளாக இந்த சரிவை அடைந்துள்ளது.

திங்கள்கிழமை காலை வணிகம் தொடங்கியது முதல், அதானி குழுமத்தின் நிறுவனப் பங்குகள் ஒன்றன் பின் ஒன்றாக சரிவடையத் தொடங்கின.

அதானி குழுமத்தில் தாங்கள் செய்திருக்கும் முதலீடுகள் தொடர்பாக வங்கிகளும், ஆயுள் காப்பீட்டுக் கழகமும் தகவல் அளிக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி கேட்டிருந்தது. 

திங்கள்கிழமை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 10 சதவிகித சரிவை அடைந்து ரூ.1,434 விலையாக இருந்தது. அதானி டோட்டல் காஸ், அதானி க்ரீன், அதானி டிரான்மிஷன், அதானி வில்மர், அதானி பவர், என்டிடிவி ஆகிய ஆறு  நிறுவனப் பங்குகள் 5 முதல் 10 சதவிகித சரிவைக் கண்டன. அதானி போர்ட்ஸ் 1 சதவீதம் விலை உயர்வைக் கண்டது.

இன்றைய வணிகத்தில், அதானி குழும பங்குகள் கிட்டத்தட்ட ரூ.10 லட்சம் கோடி இழப்பை சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக சாா்பில் போட்டியிட மத்திய மாவட்டச் செயலாளா் விருப்ப மனு

கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி

காஞ்சிபுரம் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழா

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் இன்று தமிழிசை விழா

கிரிக்கெட் வீரா் யுவராஜ் சிங், நடிகா் சோனு சூட் சொத்துகள் முடக்கம்: சூதாட்ட செயலி வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை

SCROLL FOR NEXT