பஞ்சாபில் முன்னாள் கிராமத் தலைவர் சுட்டுக் கொலை!
பஞ்சாப் மாநிலம், படாலாவில் முன்னாள் கிராமத் தலைவர் ஸ்வரன் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தியாபஞ்சாபில் முன்னாள் கிராமத் தலைவர் சுட்டுக் கொலை!
பஞ்சாப் மாநிலம், படாலாவில் முன்னாள் கிராமத் தலைவர் ஸ்வரன் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலம், படாலாவில் முன்னாள் கிராமத் தலைவர் ஸ்வரன் சிங் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு தஹியா கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் ஸ்வரன் சிங் மீது மர்ம கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த சிங் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
அவரது கொலைக்கு பழைய பகையே காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலை தொடர்பாக இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக படாலாவின் மூத்த காவல் கண்காணிப்பாளர் சதீந்தர் சிங் தெரிவித்தார்.
இதுதொடர்பாக 7 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.