(கோப்புப்படம்) 
இந்தியா

பிகாரில் 2 கிலோமீட்டருக்கு தண்டவாளத்தைத் திருடிய மர்ம நபர்கள்

பிகாரில் 2 கிமீ தூரம் அளவிலான ரயில்வே தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

பிகாரில் 2 கிமீ தூரம் அளவிலான ரயில்வே தண்டவாளத்தை மர்ம நபர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிகார் மாநிலம், சமாஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பாண்டோல் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டபாளம் பல ஆண்டுகளாக பயன்பாடற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சுமார் 2 கிமீ தூரம் அளவிலான ரயில் தண்டவாளத்தை திருடிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து தர்பங்கா ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குழு அமைத்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த வழக்கில் இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

தற்போது இவ்வழக்கு தொடர்பாக 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 2 கிமீ தூரம் ரயில்வே தண்டவாளம் திருடப்படுவது பிகாரில் இதுவே முதல் முறை. திருடப்பட்ட தண்டவாளம் லோகத் சர்க்கரை ஆலையை, பாண்டோல் ரயில் நிலையத்துடன் இணைக்கப் பயன்படுத்தப்பட்டன. 

சர்க்கரை ஆலை மூடப்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக அப்பாதையில் எந்த ரயில் இயக்கமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

அஞ்சனக்கண்ணி... அனுமோல்!

SCROLL FOR NEXT