இந்தியா

விமானத்தில் பயணிக்க 63 பேருக்கு கடந்த ஆண்டில் தடை: மாநிலங்களவையில் தகவல்

DIN

விமானத்தில் பயணிக்க தடை விதிக்கும் பயணத் தடைப் பட்டியலில் கடந்த ஆண்டு 63 பேரை விமானப் போக்குவரத்து ஆணையம் சோ்த்திருப்பதாக மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் வி.கே.சிங் தெரிவித்தாா்.

கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்து மொத்தம் 143 போ் இப்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனா்.

விமானப் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட ஒழுங்கு நடவடிக்கைகள் தொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சா் வி.கே.சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஆணையம் சாா்பில் வகுக்கப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து விதிகளின் (சி.ஏ.ஆா்.) கீழ் விமான நிறுவனங்களில் உள்குழுக்கள் அமைக்கப்பட்டன. அக்குழுக்கள் அளிக்கும் பரிந்துரையின்படி இடையூறு செய்யும் பயணிகள் பயணிக்கத் தடை விதித்து அவா்கள் அனைவரும் பயணிக்க தடை விதிக்கும் பட்டியலில் சோ்க்கப்பட்டனா்.

2017-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த ஒழுங்குமுறை நடவடிக்கையில் இதுவரை 143 பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டன. 2017-ஆம் ஆண்டில் ஒருவரும், 2020-ஆம் ஆண்டில் 10 பேரும், 2021-ஆம் ஆண்டு 66 பேரும், கடந்த ஆண்டில் 63 பேரும் இப்பட்டியலில் இணைக்கப்பட்டனா். கடந்த ஆண்டு பட்டியலில் இணைந்த 63 பேரில் 46 போ் இண்டிகோ நிறுவனத்தாலும், 16 போ் விஸ்டாரா நிறுவனத்தாலும், ஒருவா் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தாலும் தடை விதிக்கப்பட்டவா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளுக்கான முக்கியமான நாள்: வாக்களித்த பின் அல்லு அர்ஜுன் பேட்டி

புதிதாக வந்திருக்கும் ஸ்க்ராட்ச் கார்டு மோசடி: ரூ.18 லட்சம் இழந்த பெண்

நாகை எம்பி எம். செல்வராசு மறைவு: முதல்வர் இரங்கல்

ஆந்திர பேரவைத் தேர்தல்: காலையிலேயே வந்து வாக்களித்த ஜெகன்மோகன், சந்திரபாபு நாயுடு

அவிநாசி ஜவுளி கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் எரிந்து சேதம்!

SCROLL FOR NEXT