இந்தியா

நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்: திரிணாமுல் காங்கிரஸ் எம்பியை சாடிய ஹேமமாலினி!

ANI

நாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் நாக்கைக் கட்டுப்படுத்திப் பேச வேண்டும் என்று பாஜக எம்பி ஹேமமாலினி கடுமையாகச் சாடியுள்ளார். 

மக்களவையில் குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, மக்களவையில் தெலுங்கு தேச கட்சி எம்பிகே.ராம் மோகன் நாயுடு உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பாஜக எம்பி ரமேஷ் பிதுரியை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். 

பாஜக எம்பி ரமேஷ் பிதுரிக்கு எதிராக மஹுவா மொய்ரா நாடாளுமன்றத்திற்கு தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். 

இதற்கு பாஜக எம்பி ஹேமமாலினி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

நாடாளுமன்றத்திற்கென ஒரு மரியாதை உள்ளது. இதுபோன்ற வார்த்தைகளை நாடாளுமன்றத்திற்குள் பயன்படுத்தக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் நாக்கைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

அவையில் இதுபோன்று உற்சாகமும், உணர்ச்சிவசப்படவும் கூடாது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மரியாதைக்குரியவர்கள் என்று  அவர் கூறினார். 

மஹுவா மொய்த்ரா தகாத வார்த்தைகளை பேசியதற்காக பிதுரியிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT