முகப்பு
இந்தியா

அதானி பங்குகள் மீண்டும் சரிவு!

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் புதன்கிழமை ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:28 AM
கோப்புப் படம்
பகிர்:

அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் ஒரு நாள் ஏற்றத்துக்கு பின்னர் இன்று மீண்டும் சரிவை கண்டுள்ளது.

அதானி குழுமத்தின் மீது ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் மோசடி குற்றச்சாட்டை முன்வைத்ததையடுத்து, அக்குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிவடைந்துள்ளன.

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கமான வணிகத்துக்கு இடையே, அதானி குழுமத்தின் எட்டு நிறுவனங்களின் பெரும்பாலான பங்குகளும் வியாழக்கிழமை காலை சரிவுடனேயே வணிகமாகி வருகிறது.

அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை ரூ.323 குறைந்து ரூ.1,834 ஆக வீழ்ச்சி அடைந்தது. 

அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.44 குறைந்து ரூ.554 இல் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. 

அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.9 குறைந்து ரூ.172 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.

அதானி டிரான்ஸ்மின் பங்கு விலை ரூ.65 குறைந்து ரூ.1,248 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அதானி கிரீன் எனர்ஜி பங்கு விலை ரூ.38 சரிந்து ரூ.763 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

டோட்டல் கேஸ் பங்கு ரூ.69 சரிந்து ரூ.1,324 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. 

அதானி வில்மர் நிறுவனத்தின் பங்கு விலை ரூ.3 குறைந்து ரூ.415 ஆக வீழ்ச்சியுடன் வணிகமாகி வருகிறது.  

முழு கட்டுரையைப் படிக்க →