கோப்புப்படம் 
இந்தியா

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ஆளில்லா விமானம்: சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப் படை!

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

DIN

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற ஆளில்லா விமானத்தை எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் உள்ள இந்தியப் பகுதிக்குள் பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்த ஆளில்லா விமானம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றபோது, எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் அதை நோக்கிச் சுட்டு வீழ்த்தினர் என எல்லை பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தில் இருந்து 3 கிலோ போதைப்பொருள்கள், சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் நாளிதழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

SCROLL FOR NEXT