இந்தியா

புவனேஷ்வரத்தில் குடியரசுத் தலைவர் முர்மு! 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை புவனேஷ்வர் வந்தடைந்தார். 

DIN

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரண்டு நாள் பயணமாக வெள்ளிக்கிழமை புவனேஷ்வர் வந்தடைந்தார். 

முர்மு பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திற்கு 11.35 மணியளவில் சிறப்பு விமானம் மூலம் வந்தடைந்தார். ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன்பட்நாயக், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புவனேஷ்வர் மேயர் சுலோச்சனா ஆகியோர் அவரை வரவேற்றனர். 

பின்னர்,  முர்மு ஞானபிரபா மிஷனின் ஸ்தாபக நாளில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ள உட்கல் மண்டபத்திற்குப் புறப்பட்டார்.

இன்று பிற்பகல் ரமாதேவி மகளிர் பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொள்கிறார். 

சனிக்கிழமையன்று, முர்மு லிங்கராஜ் கோயிலுக்குச் சென்று, பின்னர் கட்டாக் செல்கிறார். அன்றைய தினம் புவனேஷ்வர் விமான நிலையத்தில் இருந்து தில்லி செல்கிறார்.

குடியரசுத் தலைவர் வருகையையொட்டி கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் மாநில அரசு விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது. 40 படைப்பிரிவு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

முர்மு குடியரசுத் தலைவராகப் பதவியேற்ற பிறகு ஒடிசாவுக்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

SCROLL FOR NEXT