இந்தியா

5 ஆண்டுகளில் ரூ.10.54 கோடி அதிகரித்த நாகாலாந்து முதல்வரின் சொத்து மதிப்பு

நாகாலாந்து முதல்வர் நிபியூ ரியோவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.54 கோடி அதிகரித்துள்ளது.

DIN

நாகாலாந்து முதல்வர் நிபியூ ரியோவின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.10.54 கோடி அதிகரித்துள்ளது.

60 தொகுதிகளைக் கொண்ட நாகாலாந்து சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 27ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மார்ச் 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. அதில் வடக்கு அங்கமி-2 தொகுதி தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) மூத்த தலைவரும் முதல்வருமான நிபியூ ரியோ போட்டியிடுகிறார். கடந்த 6 ஆம் தேதி அவர் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். 

அப்போது அவரது தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் நிபியூ ரியோவுக்கு ரூ. 46.95 கோடி சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர் தனது அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.15.99 கோடி என்றும், அசையா சொத்துகள் ரூ.30.96 கோடி என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நாகாலாந்து முதல்வரின் சொத்து மதிப்பு ரூ.10.54 கோடி அதிகரித்துள்ளது. 

இதன்மூலம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் கோடீஸ்வர வேட்பாளர்களில் ஒருவராக நிபியூ ரியோ உள்ளார். 2018 ஆம் ஆண்டில், நிபியூ ரியோ தனது சொத்து மதிப்பு ரூ 36.41 கோடி என்று அறிவித்தார். மறுபுறம், நாகாலாந்து பாஜக தலைவரும், அலோங்டாகி தொகுதியின் வேட்பாளருமான டெம்ஜென் இம்னா அலோங் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.10.06 கோடி என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

திமுக ஆட்சியில் அரசு மருத்துவமனையில் கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை

"WE SHALL COME BACK!" பாதையை விட்டு விலகியது Pslv-C62! ISRO தலைவர் வி. நாராயணன்

ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

SCROLL FOR NEXT