ஒடிசா பயணத்தின் இரண்டாவது நாளான இன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ லிங்கராஜ் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தனது மகள் இதிஸ்ரீ முர்முவுடன் குடியரசுத் தலைவர் லிங்கராஜ் கோயிலுக்குச் சென்றார். முர்வை காண ஏராளமானோர் கோயிலுக்கு வெளியே திரண்டனர்.
கோயிலுக்குள் சென்ற குடியரசுத் தலைவர், கோயிலினுள் இருக்கும் மற்ற தெய்வங்களையும் பிரார்த்தனை செய்தார். மேலும், புவனேஷ்ஸ்வரத்தில் உள்ள லிங்கராஜ் மகாபிரபுவுக்கு வணக்கம் செலுத்தினார்.
இந்தியக் கட்டடக்கலையின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படும் லிங்கராஜ் கோயிலில் சுமார் 40 நிமிடங்கள் செலவிட்டார். இவருடன், ஆளுநர் பேராசிரியர் கணேஷி லால் மற்றும் ஒடிசா அரசின் மூத்த அதிகாரிகளும் கோயிலில் கலந்து கொண்டனர்.
கோயில் அறக்கட்டளை லிங்கராஜப் பெருமானின் தாமோதர வேஷத்தின் புகைப்படத்தை குடியரசுத் தலைவருக்கு அன்பளிப்பாக வழங்கியது.
இதன்பின், கட்டாக் சென்ற அவர் தேசிய அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தில் 2 வது இந்திய அரிசி மாநாட்டை தொடங்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.