இந்தியா

‘ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்கப்படும்’: மத்திய அமைச்சர்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது இம்முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

DIN

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மீது இம்முறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தில் பங்கேற்று கடந்த வாரம் பேசிய ராகுல் காந்தி, அதானி விவகாரத்தில் பிரதமா் மோடி மற்றும் மத்திய அரசு மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அவரது பல்வேறு கருத்துகள், அவைத் தலைவரால் குறிப்பிலிருந்து பின்னர் நீக்கப்பட்டன.

இதனிடையே, அவையில் பிரதமா் மோடி குறித்து தெரிவித்த கருத்துகளுக்காக, ராகுல் மீது உரிமை மீறல் நடவடிக்கை கோரி, மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே ஆகியோா் அவைத் தலைவரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனா்.

‘ராகுலின் கருத்துகள் அடிப்படையற்றவை; நாடாளுமன்ற மாண்புக்கு எதிரான, அவதூறான, கண்ணியமற்ற குற்றச்சாட்டுகள், அவரால் முன்வைக்கப்பட்டன’ என்று நோட்டீஸில் இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், உரிமை மீறல் நோட்டீஸ்கள் மீது பிப்.15-க்குள் பதிலளிக்குமாறு, ராகுலுக்கு மக்களவைச் செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி குறித்து ராகுல் காந்தி முன்வைத்த ஆதரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நிஷிகாந்த் துபே நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆதரத்துடன் அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால், எந்தவொரு ஆதாரமும் அளிக்கவில்லை. நாட்டு மக்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டும். இம்முறை நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6-10 வகுப்புகளுக்கு உடற்கல்வி பாட நூல்: பள்ளிக் கல்வித் துறை வெளியீடு

வி.கே.புரம், ஆழ்வாா்குறிச்சியில் இன்று மின் நிறுத்தம்

கல்லிடைக்குறிச்சியில் குடும்ப அட்டைகளுக்கான கடைகள்மாற்றம்

களக்காட்டில் பராமரிப்பின்றி வீணாகும் கோயில் தெப்பக்குளம்

வண்ணாா்பேட்டை இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நாளை தொடக்கம்

SCROLL FOR NEXT