இந்தியா

விமரிசனங்களைக் கண்டு பயப்படும் மத்திய அரசு: பிபிசி சோதனை குறித்து காங்கிரஸ்

DIN


புது தில்லி: பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை நடத்தும் சோதனையானது ஒரு மிரட்டும் செயல் என்று விமரிசித்துள்ள காங்கிரஸ் கட்சி, விமரிசனங்களுக்கு மத்திய அரசு பயப்படுவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்  கே.சி. வேணுகோபால் கூறுகையில், தில்லியில் உள்ள பிபிசி அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தி வருவது, மோடி தலைமையிலான மத்திய அரசு விமரிசனங்களைக் கண்டு பயப்படுவதைத்தான் காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

மிரட்டும் வகையில் மத்திய அரசு செயல்படும் விதத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகாரப் போக்கை இனியும் தொடர முடியாது” என்று அவர் மேலும் கூறினார்.

பிபிசியின் மும்பை மற்றும் தில்லி அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிலவின் வடதுருவப் பகுதிகளில் அதிகளவு நீர் இருப்பு -இஸ்ரோ ஆய்வில் தகவல்

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

SCROLL FOR NEXT