கோப்புப்படம் 
இந்தியா

2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை: அமித் ஷா

2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

DIN

2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியே இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:

மத்திய அரசின் முன்முயற்சிகளால் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிரான பிரதான எதிர்க்கட்சி யார் என்பதை மக்களே முடிவு செய்வார்கள். 2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியாக யாரும் இல்லை. 

திரிபுராவில் பிப்ரவரி 16-ம் தேதி  நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், வாக்கு எண்ணிக்கை அன்று மதியத்திற்கு முன்னரே பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும்.

கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில், இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்துள்ளது, இதன் காரணமாக மக்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT