ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றும் அதன் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்குச் சமம் என்றும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கேஜரிவாலின் சுட்டுரை பதிவில்,
தில்லி மற்றும் மும்பையில் உள்ள பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்போரேஷனின்(பிபிசி) அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையை அடுத்து கேஜரிவால் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண், அதன் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் பொதுமக்களின் குரலை ஒடுக்குவதற்கு ஒப்பாகும்.
பாஜகவுக்கு எதிராக யார் பேசினாலும், அவர்கள் பின்னால் சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையை நிறுத்துவார்கள். நாட்டின் ஜனநாயக அமைப்பை நசுக்கி, ஒட்டுமொத்த நாட்டையும் தனது அடிமையாக மாற்ற பாஜக விரும்புகிறதா?
படிக்க: ’துணிவு’ உலகளவில் புதிய சாதனை
குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி ஆளும் பாஜக மீது கடுமையான அரசியல் விவாதத்தை முன்வைத்தது. இதுகுறித்து எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியது. இது நடைபெற்ற சில வாரங்களில் இவ்வாறான சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் இந்தியில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில், பிபிசி இந்தியாவுக்கு எதிரான வருமான வரித் துறை கணக்கெடுப்பு நடவடிக்கை இரண்டாவது நாளாக புதன்கிழமையான (இன்றும்) தொடர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.