இந்தியா

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கியது!

DIN

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

நாடு முழுவதும் 16,738 பள்ளிகளில் பயிலும் 16.96 லட்சம் 12ஆம் வகுப்பு மாணவர்களும், 24,491 பள்ளிகளில் பயிலும் 21.86 லட்சம் 10ஆம் வகுப்பு மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.

தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களை மாணவா்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘சாட்ஜிபிடி’ தேடுதளத்தை உள்ளடக்கிய மின்னணு சாதனங்களையும் கொண்டுசெல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகு தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று தொடங்கியுள்ள தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறுகின்றது. 10ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 21ஆம் தேதியும், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 5ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT