தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது!
தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள செகந்தராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது பீபிநகர் என்ற பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் பயணிகள் அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | தமிழகத்தில் 40 இடங்களில் என்ஐஏ சோதனை!
இந்த விபத்தை தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோதாவரி ரயில் தடம் புரண்டதால், அவ்வழியாக செல்லக் கூடிய ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு ரயில்கள் புவனகிரி, பீபிநகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.