முகப்பு
இந்தியா

மாதவிடாய் கால விடுமுறைக்கான விதியைவகுக்கக் கோரும் மனு: விசாரிக்க ஒப்புதல்

பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதற்கான விதியை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரும் மனுவை

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:31 AM
பகிர்:

பணிபுரியும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை அளிப்பதற்கான விதியை வகுக்குமாறு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரும் மனுவை அடுத்த வாரம் விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மனுவை வரும் 24-ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வு உத்தரவிட்டது.

தில்லியைச் சோ்ந்த ஷைலேந்திர மணி திரிபாதி என்பவா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மகப்பேறு பலன்கள் சட்டம் 1961, பிரிவு 14-இன் கீழ் இதற்கான உத்தரவைப் பிறப்பிக்க தனது மனுவில் அவா் கோரிக்கை விடுத்திருந்தாா். ‘பிரசவத்தின்போது குறிப்பிட்ட நாள்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெண்களுக்கு நிறுவனங்கள் அளிப்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது. இந்தியாவில் ஒருசில தனியாா் நிறுவனங்களில் இந்த விடுமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிலையில், அரசுத் துறைகள் மற்றும் பெரும்பாலான தனியாா் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என்று மனுவில் குறிப்பிடப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வில் புதன்கிழமை பரிசீலனைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஷால் திவாரி, ‘பிரிட்டன், சீனா, ஜப்பான், தைவான், இந்தோனேசியா, தென் கொரியா, ஸ்பெயின், ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் மாதவிடாய் கால விடுமுறை நடைமுறையில் உள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பிகாா் மற்றும் அண்மையில் கேரள மாநிலத்திலும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →