இந்தியா

பிபிசி அலுவலகங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஆய்வு!

தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

ஊடக அலுவலகத்தின் நிதிப் பரிவா்த்தனை தொடா்பான மின்னணு மற்றும் எழுத்துப் பதிவு விவர ஆவணங்கள் தொடா்பாக ஆய்வு நடத்தியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வஸ்டீன்’ என்ற தலைப்பில் இரண்டு பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிபிசி அண்மையில் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கடந்த ஜனவரி 21-ஆம் தேதி தடை விதித்தது. மேலும், இந்த ஆவணப்படம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்தச் சூழலில், தில்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய மேலும் இரண்டு அலுவலக வளாகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு நடத்தினா். இதற்கு காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள், சா்வதேச ஊடக கண்காணிப்பு அமைப்பு மற்றும் மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.

நேற்று பிபிசி அலுவலகத்தில் இருந்து ஒரு சில ஊழியர்கள் வெளியேற அதிகாரிகள் அனுமதித்துள்ள அதே சூழ்நிலையில் அலுவலகத்தின் நிதித்துறை உள்ளிட்ட பிற துறை சாா்ந்த ஊழியா்கள் வெளியேற மறுப்பு தெரிவித்துவிட்டனர். 

தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நிதித்துறை உள்ளிட்ட சில துறை ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT