இந்தியா

பாதுகாப்புக்கான செலவை உயர்த்திய மெட்டா சிஇஓ!

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அவருடைய பாதுகாப்புக்கான செலவினத்தை உயர்த்தி உள்ளார்.

DIN

மெட்டா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அவருடைய பாதுகாப்புக்கான செலவினத்தை உயர்த்தி உள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் சுமார் 11,000 பணியாளர்கள்  பணிநீக்கத்தைத் தொடர்ந்து, அதன் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பாதுகாப்பு செலவினத்துக்காக $4 மில்லியன் டாலரை அதிகரித்துள்ளார்.

ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவினத்துக்காக $10 மில்லியன் டாலரில் இருந்து $14 மில்லியன் டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தியது.

அந்த அறிக்கையின்படி, "ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்பு செலவினத்துக்கான தற்போதைய அதிகரிப்பு, இந்த சூழ்நிலையில் பொருத்தமானது மற்றும் அவசியமானது" என்று மெட்டா கூறியுள்ளது.

இந்த ஆண்டின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் மெட்டாவின் முகநூல் நிறுவனம் சுமார் 11,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்தது. மெட்டா பணி நீக்கங்கள் நவம்பர் 2022 இல் நடந்தன.

மேலும் இந்த பணிநீக்கங்கள் தொழில்நுட்பத் துறையில் மிகப்பெரிய பணிநீக்கங்களாக அறியப்பட்டன. மெட்டா நிறுவனம் விரைவில் இரண்டாவது சுற்று பணிநீக்கங்களை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமி உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத் திட்ட உதவிகள் வழங்கினாா் எம்எல்ஏ

இன்று உங்கள் ராசிக்கு எப்படி?

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

SCROLL FOR NEXT