இந்தியா

மெகா தேசிய பழங்குடியின திருவிழா: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

DIN



புதுதில்லி: பழங்குடியினரின் கலாச்சாரத்திற்கு பெரும் மதிப்பளிக்கும் வகையில், ‘ஆதி மஹோத்சவ்’ என்ற மெகா தேசிய பழங்குடியின விழாவை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடங்கி வைத்து, சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் பங்காற்றிய பழங்குடியின மக்களுக்கு பெரும் மதிப்பளிக்கும் வகையில், அவர்களது நலன்களுக்கான நடவடிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடி முன்னின்று மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி, பழங்குடியினத்தின் கலாசாரங்களை தேசிய அளவில் காட்சிப்படுத்தும் முயற்சியாக, தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய அரங்கத்தில் வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில்  ‘ஆதி மஹோத்சவ்’ என்ற பெயரிலான மெகா தேசிய பழங்குடியின திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பழங்குடி கலாசாரம், கைவினை பொருள்கள், உணவு பொருள்கள், வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிகழ்ச்சியானது மத்திய பழங்குடியின விவகாரங்களுக்கான அமைச்சகம் சார்பில் வியாழக்கிழமை (பிப்.16) முதல் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

நிகழ்ச்சியில் 200 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த  ‘ஆதி மஹோத்சவ்’ இல் ஆயிரக்கணக்கான பழங்குடியின கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.  

சர்வதேச சிறுதானியங்களுக்கான ஆண்டாக 2023 ஆம் ஆண்டு கொண்டாடப்படும் சூழலில் பழங்குடியினரால் வளர்த்தெடுக்கப்பட்ட ஸ்ரீ அன்னா சிறுதானியமும் இதில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் கூறியது போல் எதுவும் நடக்கவில்லை: தில்லி அமைச்சர் அதிஷி விளக்கம்

பிரான்ஸில் சோபிதா துலிபாலா..

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

SCROLL FOR NEXT