இந்தியா

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆகப் பதிவு!

DIN

இந்தோனேசியாவின் கிழக்கு மண்டலமான மலுகுவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

தனிம்பார் தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில்  6.1 அலகுகளாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் அண்மையில் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இரு நாடுகளிலும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நிலநடுக்க பாதிப்பில் சுமார் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான கட்டடங்கள் சேதமடைந்த நிலையில், பல ஆயிரம் கணக்கானோர் காயமடைந்தனர். 

இந்நிலையில் இன்று இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலடுக்கத்தால் உயிா் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. 

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும் ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராயன் - பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா!

நியூஸ் கிளிக் நிறுவனரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

அவள் அப்படித்தான்!

காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கேஜரிவால் பேரணி!

குடிநீரில் தேனடை: மனிதக்கழிவு என புகார்!

SCROLL FOR NEXT