இந்தியா

சிவாஜியின் வீரம், நல்ல நிர்வாகம் நமக்கு ஊக்கமளிக்கிறது: பிரதமர் மோடி

DIN

சத்ரபதி சிவாஜியின் வீரம் மற்றும் நல்ல நிர்வாகம் நமக்கு ஊக்கமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மராத்தா பேரரசினை உருவாக்கிய சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி இதனை தெரிவித்தார். 1630 ஆம் ஆண்டு பிறந்த சிவாஜி அவரது வீரம், ராணுவத் தந்திரம் மற்றும் தலைமைப் பண்பின் மூலம் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவித்தார்.

இது குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிவாஜி அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அவரது வீரமும், சிறப்பான நிர்வாகமும் நமக்கு ஊக்கமளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவுடன் சிவாஜிக்கு மரியாதை செலுத்துவது தொடர்பான ஆடியோ மற்றும் விடியோ ஒன்றினையும் அவர் இணைத்துள்ளார்.

மராத்தி மொழியிலும் ட்விட்டரில் பதிவிட்டு சிவாஜிக்கு பிரதமர் மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் எல்லையை ஆக்கிரமிக்கும் ரஷிய படைகள்: ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளியேற்றம்

தனிநபர் சதங்களில் ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!

உ.பியில் கார் மீது லாரி மோதல்! மணமகன் உள்பட 4 பேர் பலி

மோடியின் நாடகங்கள் ஜூன் 4 -ல் முடிந்துவிடும்! : உத்தவ் தாக்கரே

"கொளத்தூரில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் ரூ.110 கோடியிலான நவீன புதிய சிறப்பு மருத்துவமனை"

SCROLL FOR NEXT