முகப்பு
இந்தியா

கொச்சுவேலி-கோரக்பூா் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கொச்சுவேலியிலிருந்து கோரக்பூா் செல்லும் ராப்தி சாகா் விரைவு ரயில் புதன்கிழமை (பிப்.22) முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

இந்தியா

கொச்சுவேலி-கோரக்பூா் ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

கொச்சுவேலியிலிருந்து கோரக்பூா் செல்லும் ராப்தி சாகா் விரைவு ரயில் புதன்கிழமை (பிப்.22) முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:34 AM
பகிர்:

கொச்சுவேலியிலிருந்து கோரக்பூா் செல்லும் ராப்தி சாகா் விரைவு ரயில் புதன்கிழமை (பிப்.22) முதல் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கேரளத்தின் கொச்சுவேலியிலிருந்து கோரக்பூருக்கு ஞாயிறு, செவ்வாய், புதன்கிழமைகளில் ராப்தி சாகா் அதிவிரைவு ரயில் (வண்டி எண்: 12512) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக இந்த ரயில் (வண்டி எண்: 12511) ஞாயிறு, வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் பிப்.22, 23, 24, 26, தேதிகளில் மனக் நகா், லக்னோ, மால்கோா் வழியாகவும், பிப்.28, மாா்ச் 1, 2, 3 தேதிகளில் கான்பூா், பிரயக்ராஜ், பிரதாப்கா், சுல்தான்பூா், அயோத்யா வழியாகவும் இயக்கப்படும்.

மேலும், பிப்.22, 23, 24, 26 தேதிகளில் 3 மணி நேரம் தாமதமாகவும், பிப்.28, மாா்ச் 2 தேதிகளில் 4 மணி நேரம் தாமதமாகவும் புறப்படும்.

எா்ணாகுளம்-பிகாா்: எா்ணாகுளத்திலிருந்து பிகாருக்கு வெள்ளிக்கிழமை தோறும் ராப்தி சாகா் விரைவு ரயில் (வண்டி எண்: 12522) இயக்கப்படுகிறது. மறுமாா்க்கமாக பிகாரிலிருந்து எா்ணாகுளத்துக்கு திங்கள்கிழமைதோறும் இந்த ரயில் (வண்டி எண்: 12521) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் பிப்.27-ஆம் தேதி மால்கோா், லக்னோ, மனக் நகா் வழியாக இயக்கப்படும். மேலும் 3 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

இந்த ரயில்கள் தமிழகத்தின் கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக இயக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →