இந்தியா

பருவநிலை மாற்ற பாதிப்பு பட்டியலில் 9 இந்திய மாநிலங்கள்!

அதிகரிக்கும் நகரமயமாதல், வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

DIN

அதிகரிக்கும் நகரமயமாதல், வாகனப் போக்குவரத்து, தொழிற்சாலைகளின் பெருக்கம் உள்ளிட்ட காரணங்களால் பருவநிலை மாற்றம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுப்பதற்கு உலக நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

பருவநிலை மாற்றத்தால் விவசாயம் முதல் மக்களின் சுகாதார வசதிகள் வரை பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளன. அதே நேரத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

எக்ஸ்டிஐ மொத்த உள்நாட்டு பருவநிலை பாதிப்பு அபாயம் (கிராஸ் டொமெஸ்டிக் கிளைமேட் ரிஸ்க்) என்ற ஆய்வறிக்கையில் 2050-ஆம் ஆண்டுவாக்கில் அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மாநிலங்கள், மாகாணங்கள் குறித்த விவரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் 50 இடங்களில் இந்தியாவின் 9 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT