இந்தியா

கரோனா அச்சம்: 3 ஆண்டுகளாக வீட்டுக்குள் முடங்கிய தாய், மகன் மீட்பு

ANI

குருகிராம்: ஹரியாணா மாநிலம் குருகிராமில், கரோனா அச்சம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடந்த தாயும் மகனும் மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் உஷா சோலங்கி கூறுகையில், சக்கர்பூரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த நபர், குருகிராம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதாவது, தனது மனைவியும் மகனும் வீட்டுக்குள் பூட்டிக்கொண்டு இருப்பதாகவும், ஒன்றை தன்னை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் இல்லாவிடில் வீட்டிலிருக்கும் தனது மகனை வெளியே அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து, காவல்துறையினர் அந்தக் குடியிருப்புக்குச் சென்று, அப்பெண்ணையும், 11 வயது மகனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வெளியே வந்தால் கரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருவரும் தங்களை வீட்டுக்குள் வைத்துப் பூட்டிக் கொண்டது தெரிய வந்துள்ளது. அப்பெண்ணின் மனநிலையை ஆராயவும் காவல்துறையினர் முடிவு செய்திருக்கிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT