தில்லி சிபிஐ தலைமை அலுவலகத்தைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்க்கப்பட்டுள்ளது.
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகளால் சோதனை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் நடைபெற்றது. 3 மாதங்களுக்கு முன்பாக இது குறித்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதமும் சோதனை நடைபெற்ற நிலையில், மணீஷ் சிசோடியாவுக்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியது.
தில்லி அரசின் பட்ஜெட் தொடர்பான வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் மதுபானக் கொள்கை மாற்ற மோசடி வழக்கில் சிபிஐக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.
இந்த நிலையில், மதுபானக் கொள்கை வழக்கில் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடம் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) இன்று விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: தங்க நகை வியாபாரியிடம் கட்டுக்கட்டாக பணம்...ரூ. 62 இலட்சம் பறிமுதல் செய்து காவல்துறை விசாரணை!
இதனையடுத்து, சிபிஐ தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஆம் ஆத்மி தலைவர்களின் போராட்டம் நடத்தவுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.