இந்தியா

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி!

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிரான மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளிலும் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்கள் பணியமா்த்தப்படுவா் என்று பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் அறிவித்தது. இந்த வீரா்களில் சிறப்பாகப் பணியாற்றும் 25 சதவீதத்தினருக்கு மட்டும் நிரந்தரப் பணி வழங்கப்படும். மற்றவா்கள் பணிக்கொடையுடன் விடுவிக்கப்படுவா் என்றும் கூறப்பட்டது. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ராணுவ பணிக்கு தயாராகி வரும் இளைஞா்கள், அண்மையில் இத்திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் அக்னிபத் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தில்லி, கேரளம், பஞ்சாப் மற்றும் ஹரியாணா, பாட்னா, உத்தரகண்ட் உயா்நீதிமன்றங்களில் பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல், உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கலாகின. இந்த மனுக்களை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. 

அதன்படி இந்த வழக்கை விசாரித்து வந்த தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா தலைமையிலான அமர்வு, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இந்தத் திட்டம் தேசிய நலனைக் கருத்தில் கொண்டும், பாதுகாப்புப் படை மேம்படுத்துவதற்காகவும் கொண்டுவரப்பட்டது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை மாநகராட்சிக்கு பலத்த பாதுகாப்பு!

உத்தரகண்டில் மேக வெடிப்பு! பல குடும்பங்கள் மாயம்!

தெய்வ தரிசனம்... குழந்தைகளின் பாலாரிஷ்டம் தோஷம் நீக்கும் குரங்கணில்முட்டம் வாலீஸ்வரர்!

Dinamani வார ராசிபலன்! | Aug 31 முதல் Sep 06 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ரூ. 76,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

SCROLL FOR NEXT