கர்நாடகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்தார்.
தாமரை வடிவ முனையத்துடன் சுமார் ரூ.450 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்தார். மேலும், ஷிவமோகா, பெலகாவி மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த புதிய விமான நிலையம், மணிக்கு 300 பயணிகள் வரை கையாளும் திறன் கொண்ட வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஷிவமோகாவில் இருந்து மலநாடு பகுதிக்கு போக்குவரத்து தொடர்பை விரிவுபடுத்தும், எளிதாகச் செல்லும் வகையில் விமானப் போக்குவரத்து அமையும்.
கர்நாடகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி கடந்த இரண்டு மாதங்களில் ஐந்தாவது முறையாக இன்று ஷிவமோக வருகை தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.