நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம்  
இந்தியா

நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம் 

ஊடுருவியவர்களால் பெயர் மாற்றப்பட்ட வரலாற்று மற்றும் வழிபாட்டுத் தளங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சிறப்பு குழுவை அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

DIN

புது தில்லி: ஊடுருவியவர்களால் பெயர் மாற்றப்பட்ட வரலாற்று மற்றும் வழிபாட்டுத் தளங்களின் பெயர்களை மாற்றுவதற்கான சிறப்பு குழுவை அமைக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது.

காட்டுமிராண்டித் தனமான வெளிநாட்டுப் படையெடுப்பாளர்களால் நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க மற்றும் மதவழிபாட்டுத் தலங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று கூறிய மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், நாட்டின் எந்தவொரு பகுதியின் வரலாற்றுச் சிறப்புகளும் அழிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

மூத்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த மனுவில், பெயர்மாற்றும் ஆணையம் அமைத்து, நமது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களின் உண்மையான அடையாளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற வலியுறுத்தியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள் கே.எம். ஜோசப் மற்றும் பி.வி. நாகராத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த மனுவின் நோக்கம் என்ன என்று கேள்வி எழுப்பியது. மேலும், இதன் மூலம் அந்த பிரச்னைகளுக்கு உயிர் கொடுத்து நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? என்று கேட்டதுடன், இந்தியா, ஒரு நாளும் பழைமைகளின் கைதியாக இருக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நமது நாட்டின் ஒரு பகுதியை வெளிநாட்டினர் ஊடுருவி ஆண்டது உண்மைதான். ஆனால் அந்தப் பகுதிகளின் வரலாற்றி நாம் ஒரு போதும் அழித்துவிட முடியாது என்றும் கூறியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

மாலை மலர்ந்த ஊதா... அம்ரிதா ஐயர்!

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

SCROLL FOR NEXT