முகப்பு
இந்தியா

ராஜஸ்தான்: மருத்துவமனையில் நாய் கடித்து குழந்தை பலி

ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:37 AM
கோப்புப் படம்.
பகிர்:

ராஜஸ்தானில் அரசு மருத்துவமனையில் தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த ஒரு மாத ஆண் குழந்தையை நாய்கள் கடித்துக் கொன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘சிரோஹி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை காசநோய் பிரிவில் உள்நோயாளியாக உள்ள கணவருடன் ரேகா தனது மூன்று குழந்தைகளுடன் தங்கி இருந்தாா். திங்கள்கிழமை நள்ளிரவு 2 தெரு நாய்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து, ஒரு மாத கைக்குழந்தையை கவ்வி எடுத்துச் சென்று கடித்துக் கொன்றன. சிசிடிவியில் பதிவான இந்தச் சம்பவத்தையடுத்து, மருத்துவமனைக்கு வெளியே குழந்தையின் சடலம் கைப்பற்றப்பட்டது’ என்றனா்.

இதனிடையே, உயிரிழந்த குழந்தையின் தந்தை மகேந்திர மீனா மருத்துவமனை நிா்வாகம் மீது குற்றம்சாட்டினாா். ‘தெரு நாய்கள் தொடா்ந்து மருத்துவமனைக்குள் திரிகின்றன. பல முறை நானே விரட்டியடித்தேன். திங்கள்கிழமை நள்ளிரவு 2 மணிக்கு திடீரென எழுந்து பாா்த்தபோது நாய்கள் எங்கள் குழந்தையை கடித்துக் கொண்டிருந்தன. மருத்துவமனை நிா்வாகம் செவ்வாய்க்கிழமை காலை எங்களிடம் வெற்று காகிதங்களில் கையொப்பங்களைப் பெற்று எங்களுக்கு காட்டாமலேயே குழந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டது’ என்றாா்.

தெலங்கானாவில் கடந்த வாரம் நான்கு வயது சிறுவனை தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு கடித்துக் கொன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து, உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து வருகிறது. உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தாருக்கு ரூ. 6 லட்சம் வழங்கப்படும் என ஹைதராபாத் மாநகராட்சி அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →