நாடு எப்போதும் கொந்தளிப்பிலேயே இருக்க வேண்டுமா? உச்ச நீதிமன்றம்  
இந்தியா

மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல்! 

கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனு மாக்கல் செய்தார். 

PTI

கலால் கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் மனு மாக்கல் செய்தார். 

சிபிஐ காவலில் உள்ள சிசோடியா தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஏம்.எம்.சிங்வியின் சமர்ப்பிப்புகளைத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் தலைமையிலான அமர்வு கவனத்தில் கொண்டு, இதுதொடர்பாக இன்று மாலை 3.50 மணிக்கு மனுவை விசாரிக்க ஒப்புக்கொண்டது. 

தில்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. 

இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, திங்கள்கிழமை தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். 

மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாள் (மார்ச் 4 வரை) சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க தில்லி சிறப்பு நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

மருத்துவமனையிலிருந்து கைதி தப்பியோட்டம்

SCROLL FOR NEXT