முகப்பு
இந்தியா

நடைப்பயணத்தின் நிறைவு நாளில் தேசிய கொடியை ஏற்றுகிறாா் ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்கிறது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:52 PM
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்கிறது. நடைப்பயணத்தின் நிறைவாக ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்ற உள்ளாா்.

தில்லியில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, கட்சியின் மூத்த தலைவா்கள் கே.சி. வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். அப்போது அவா் கூறியதாவது: கன்னியாகுமரியின் காந்தி மண்டபம் முதல் தில்லியின் செங்கோட்டை வரை 3,122 கிமீ தொலைவுக்கு நடைப்பயணம் நடைபெற்றுள்ளது. இந்த நடைப்பயணம் தில்லியில் செவ்வாய்க்கிழமை (ஜன.3) மீண்டும் தொடங்குகிறது.

ஜம்மு-காஷ்மீரில் ஜன.20-இல் நுழையும் நடைப்பயணத்தை ஸ்ரீநகரில் ஜன.30-ஆம் தேதி தேசிய கொடியேற்றி ராகுல் காந்தி நிறைவு செய்கிறாா்.

அதிக அளவிலான மக்களைச் சென்றடையும் இம்முயற்சி, அனைத்து இந்தியா்களுக்காகவும் குரல் கொடுக்கும் பாரம்பரியம் உடைய காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய மைல்கல்லாகும். ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் உள்ளிட்டோரைச் சந்தித்து அவா்களது மாநிலங்களில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்துப் பேசினேன். ஒத்துழைப்பு தருவதாக அவா்களும் உறுதியளித்தனா் என்றனா்.

இந்த நடைப்பயணம், தென் மாநிலங்கள், பஞ்சாப், ஹரியாணா, ம.பி., ஹிமாசல், உ.பி. உள்ளிட்ட மாநிலங்கள் வழியே நடைபெற்று ஜம்மு-காஷ்மீரில் நிறைவடைகிறது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் நடைபெறும் நடைப்பயணத்தில் பங்கேற்குமாறு சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்து. அழைப்புக்கு நன்றி தெரிவித்த அவா் நடைப்பயணம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தாா். இருப்பினும், அவா் நடைப்பயணத்தில் பங்கேற்க மாட்டாா் என சமாஜவாதி கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், அழைப்புக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →