இந்தியா

ஆந்திரத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை! காரணம்?

ஆந்திரத்தில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது . 

DIN

ஆந்திரத்தில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்பைத் தொடர்ந்து அங்கு பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது . 

நெல்லூர் மாவட்டம் கண்டுகூர் நகரில் கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏற்பாடு செய்த பொதுக்கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு வடிகால் கால்வாய் ஒன்றின் சிமெண்ட் தளம் உடைந்து பலர் அதனுள் விழுந்தனர். இதில் ஒரு பெண் உள்பட மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர். இந்த விபத்தை அடுத்து கூட்டத்தை உடனடியாக ரத்து செய்தார் சந்திரபாபு நாயுடு. மேலும், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியுடன் அந்த குடும்பங்களில் உள்ள குழந்தைகளின் கல்வி செலவை ஏற்பதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தரப்பிலும் இறந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. 

இந்த சம்பவத்தின் எதிரொலியாக ஆந்திரத்தில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தடை விதித்துள்ளார். 

மக்களின் பாதுகாப்பு கருதி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சாலைகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்த தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT