கோப்புப்படம் 
இந்தியா

பொதுத்தேர்வு: ஜன. 27ல் மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கலந்துரையாடுகிறார். 

DIN

நடப்பு ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஜனவரி 27 ஆம் தேதி கலந்துரையாடுகிறார். 

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதற்றம், மன அழுத்தம் ஆகியவற்றைப் போக்கும் வகையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியை(பரிட்சா பே சர்ச்சா) நடத்தி வருகிறது. 

இந்நிலையில் நடப்பு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். வருகிற ஜனவரி 27 ஆம் தேதி காணொலி மூலமாக இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தேர்வினால் ஏற்படும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான உதவிக் குறிப்புகளை பிரதமர் மோடி, மாணவர்களுடன் பகிர்ந்துகொள்கிறார் மேலும் மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியின்போது, போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 2,050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி அமைச்சகம் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு! இன்றைய நிலவரம்!

கோவை விமான நிலையத்துக்குள் தவெக தொண்டர்கள் நுழையத் தடை!

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT