அருணாசலில் மிக முக்கிய பாலத்தை திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங் 
இந்தியா

அருணாசலில் சியோம் பாலத்தை திறந்துவைத்தார் ராஜ்நாத் சிங்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அருணாசலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த சியோம் பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

PTI

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அருணாசலப் பிரதேசத்தில் கட்டப்பட்டு வந்த சியோம் பாலத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்தார்.

மேலும், எல்லையோர சாலைகள் நிறுவனம் மூலம் நிறைவேற்றப்பட்ட 27 திட்டங்களையும் இன்று ராஜ்நாத் சிங் துவக்கி வத்துள்ளார்.

இந்திய எல்லையோர உள்கட்டமைப்பை மேம்படுத்த உதவும் வகையில், ரூ.724 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், பெரும்பாலும் சீன எல்லையையொட்டி லடாக் - அருணாசலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் சிறப்பான மற்றும் எளிமையான போக்குவரத்து வசதியை உருவாக்க பிரதமர் தலைமையிலான மத்திய அரசு பணியாற்றி வருகிறது. குறிப்பாக வடகிழக்குப் பகுதிகளுக்கு என்று தெரிவித்துள்ளார்.

அலோங் - யின்கியோங் சாலை - 100 மீட்டர் எஃகு உலோகத்தால் வளைவுகளைக் கொண்ட இந்த பாலம், விரைவாக இந்திய படைகள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக அப்பர் சியாங் மாவட்டங்களுக்கு படைகளை எடுத்துச் செல்ல முடியும். 

மேலும், காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில், அருணாசலம், ஜம்மு - காஷ்மீர், லடாக், உத்தரகண்ட், சிக்கிம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கட்டப்பட்ட 21 மேம்பாலங்கள், மூன்று சாலைகள், மூன்று கூடுதல் கட்டமைப்புகள் போன்றவற்றையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT