இந்தியா

கொல்கத்தாவில் கணக்கில் வராத ரூ.60 லட்சம் ரொக்கம் பறிமுதல்: 9 பேர் கைது

கொல்கத்தாவில் கணக்கில் வராத சுமார் ரூ.60 லட்சம் பணத்தை வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் இன்று (ஜனவரி 3) தெரிவித்தனர்.

DIN

கொல்கத்தா: கொல்கத்தாவில் கணக்கில் வராத சுமார் ரூ.60 லட்சம் பணத்தை வைத்திருந்த 9 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் இன்று (ஜனவரி 3) தெரிவித்தனர்.

ஹவாலா பணப் பரிவர்த்தனைக்காக பெருமளவு பணம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொல்கத்தா காவல்துறையின் துப்பறியும் ரவுடி தடுப்புப் பிரிவு நேற்று (திங்கள்கிழமை) மாலை புர்ராபஜார் பகுதியில் சோதனை நடத்தியது.

முதலில் ஒருவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், புர்ராபஜார் பகுதியின் பல்வேறு பகுதிகளில் இருந்து மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், மொத்தம் ரூ.59,76,200 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே வேளையில் பிடிப்பட்டவர்களால் பணத்திற்கான ஆதாரத்தை வழங்க முடியவில்லை. எனவே, அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பணத்தின் ஆதாரம் மற்றும் அது எங்கு அனுப்பப்பட்டது என்பதை அறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இது குறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT