முகப்பு
இந்தியா

கடும் குளிர்! ஜன. 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை! எங்கு தெரியுமா?

ஜனவரி 9ஆம் தேதி முதல் குளிர் குறைந்து, இதமான காலநிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:37 PM
கோப்புப் படம்
பகிர்:

ராஞ்சி: ஜார்க்கண்டில் கடும் குளிர் நிலவி வருவதால், அனைத்து தொடக்கப் பள்ளிகள் ஜனவரி 8ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி 8ஆம் தேதி வரை, 7 முதல் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும், அதே வேளையில் வானம் பனிமூட்டம் மற்றும் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனவரி 9 முதல் குளிர் குறைந்து, இதமான காலநிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி முதல் வாரத்தில் நிலவும் கடும் குளிரைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயலும் 1வது முதல் 5ஆம் வகுப்பு வரையான குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என மாநில பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் அனைத்து மாணவர் பதிவுகளையும் ஆன்லைன் மூலம் புதுப்பிக்க பள்ளிகளுக்கு வருவார்கள். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →