தமிழகத்தில் டிச.30 வரை லேசான பனிமூட்டம் நிலவும்: வானிலை ஆய்வு மையம்! 
இந்தியா

2 ஆண்டுகளில் இல்லாத கடும் குளிர்: சூடான தேநீர் கோப்பையைத் தேடும் தில்லி மக்கள்!

தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவி வருவதால்,  அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

PTI


தலைநகர் தில்லியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவி வருவதால்,  அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தில்லியில் வழக்கத்தை விட கடும் குளிர் நிலவி வருவதால், பெரும்பாலானோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல், சூடான தேநீர் கோப்பையும், போர்வையையும் தேடி வருகின்றனர். 

இமயமலையில் உறைபனி காற்று தேசிய தலைநகர் உள்பட சமவெளிகளில் வீசி வருவதால், மலைப் பிரதேசங்களை விட மிகுந்த குளிர் காணப்படுகிறது. இன்று காலை வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. 

தில்லி உள்பட வட இந்தியா முழுவதும் அடர்ந்த மூடுபனி காரணமாக வாகனங்களை ஓட்டுபவர்கள் விபத்துநேரவண்ணம் குறித்த இடத்தைச் சென்றடைவதென்பது பெரும் சவாலாக இருந்துவருகிறது. 

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, 

இது மிகவும் அடர்த்தியான மூடுபனியாகும்.  0 முதல் 50 மீட்டர் வரையிலும், 51-200 மீட்டர் மிகவும் அடர்த்தியாகும். 201-500 மீட்டர் மிதமானது. 501-1000 மீட்டர் குறைவானதாகும். இந்நிலையில் தலைநகரில் தற்போது இன்று காலை நிலவரப்படி 50 மீட்டர் அளவில் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவி வருகிறது. 

பனிமூட்டமான வானிலை காரணமாகக் குறைந்தது 12 ரயில்கள் ஒன்றரை முதல் ஆறு மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், இரண்டு ரயில்கள் மாற்றியமைக்கப்பட்டதாகவும் ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தர்ஜங் ஆய்வகம், புதன் கிழமை 4.4 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 8.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்த நிலையில் வியாழனான இன்று மேலும் குறைந்து வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. 

தில்லியில் உள்ள லோதி சாலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 2.8 டிகிரி செல்சியஸாகவும், அயநகரில் 2.2 டிகிரி செல்சியஸாகவும், ரிட்ஜ் பகுதியில், 2.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது.

அதிகப்படியான குளிர் காரணமாக வீடற்றவர்களுக்கு இந்த காலநிலை பெரும் சவாலாக இருந்துவருகிறது. நகரம் முழுவதும் நெருப்பு மூட்டி மக்கள் அதைச் சுற்றியும் திரண்டுள்ளனர். 

இன்றும், நாளையும் கடும் குளிர் நிலவும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

பெரியார் பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை!

SCROLL FOR NEXT