இந்தியா

பட்ஜெட் போன் வரிசையில் 'சாம்சங் கேலக்ஸி எஃப்4' அறிமுகம்!

DIN

கேலக்ஸி  எஃப்4-ஐ  ஸ்மார் போனை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் நேற்று (ஜன.4) அறிமுகப்படுத்தியது. இதில் மீடியா டெக் பி35 செயலி மற்றும் 6.5 அங்குலம் எச்டி-பிளஸ் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது 

டிஸ்ப்ளே ஆனது 720x1600 பிக்சல்கள் கொண்டது. இதை இயக்க உள்ளே மீடியாடெக் பி35 சிப் வழங்கப்பட்டுள்ளது.  5,000mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில் சாம்சங் இந்த மாடலின் சார்ஜிங் வேகத்தை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம் எடுப்பதற்கு பிரத்யேகமாக 12எம்பி பின்பக்க கேமரா மற்றும் 2எம்பி கொண்ட இரண்டாம் நிலை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபிகளை சிறந்த முறையில் கையாள 5எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் கட்டமைப்பானது பின்புறம் பிளாஸ்டிக் வழங்கியுள்ள நிலையில், முன்புறம் பிளாஸ்டிக் சட்டத்துடன் வருகிறது. இருப்பினும் சாம்சங் 'ஸ்டைலிஷ் க்ளோஸ் டிசைன்' என்று விளம்பரப்படுத்த விரும்புகிறது. 

சாம்சங் கேலக்ஸி எஃப்4 ஆனது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை ரூ.7,499 ஆகும். 8ஜிபி ரேம் பிளஸ் வரை விரிவாக்க முடியும் என சாம்சங் தெரிவித்துள்ளது. ஊதா மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் இந்த செல்போன் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமுக்கூடல் செல்லியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

SCROLL FOR NEXT