முகப்பு
இந்தியா

மருத்துவரை கத்தியால் தாக்கிய நோயாளி; மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

மகாராஷ்டிர அரசு மருத்துவமனை மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
பகிர்:

மகாராஷ்டிர அரசு மருத்துவமனை மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் யவத்மால், ஸ்ரீ வசந்தராவ் நாயக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று இரவு 7.30 மணிக்கு மருத்துவர் ஒருவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த மருத்துவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீ வசந்தராவ் நாயக் அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதற்கு முன்னதாகவும் இந்த மருத்துவமனையில் இதுபோன்றதொரு சம்பவம் நடைபெற்றதாகக் கூறி பாதுகாப்பு வேண்டும் என்று துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கு கடிதம் எழுதியுள்ளனர். 

ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு மாநில அரசிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →