2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகள்: குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்
2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) வழங்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டினை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அறிவார்ந்த சமூகமாக மாற்றும் நோக்கில் டிஜிட்டல் இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் சிறப்பாக செயல்படும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இந்தியா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கவுள்ளார்.
இதையும் படிக்க: சோனியா காந்தி உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்
Advertisement
Advertisement
அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த டிஜிட்டல் இந்தியா விருதுகள் இந்த முறை, முதல் முறையாக தொழில் தொடங்கி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நிறுவனங்களுக்கும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அறிவிப்பு ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை (ஜனவரி 7) 2022-ஆம் ஆண்டுக்கான டிஜிட்டல் இந்தியா விருதுகளை வழங்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.