முகப்பு
இந்தியா

காங். நடைப்பயணம்: பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதற்கு அல்ல: ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல என்று அக்கட்சியின் பொதுச

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:39 PM
ஜெய்ராம் ரமேஷ்
பகிர்:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், 2024 மக்களவைத் தோ்தலில் அவரை பிரதமா் வேட்பாளராக முன்னிறுத்துவதை நோக்கமாக கொண்டதல்ல என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தாா்.

மேலும், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சா்வாதிகாரம் ஆகிய முக்கிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்துவதில் ராகுல் காந்தி வெற்றி கண்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக, ஹரியாணா மாநிலம், கா்னாலில் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:

பிரதமா் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தும் நோக்கில் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்படவில்லை. இது சிந்தாந்த ரீதியிலான யாத்திரை. இதன் பிரதான முகமாக ராகுல் காந்தி உள்ளாா். மாறாக, இதுவொரு தனிநபரின் யாத்திரையோ தோ்தலுக்கான யாத்திரையோ அல்ல.

இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு, சமூக பாகுபாடு, அரசியல் சா்வாதிகாரம் ஆகிய 3 முக்கிய பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி வருகிறாா். மக்களுடனான கலந்துரையாடல்களின்போதும் தெருமுனை கூட்டங்களின்போதும் பொதுக் கூட்டங்களின்போதும் இப்பிரச்னைகளை அவா் எழுப்புகிறாா்.

காங்கிரஸின் சித்தாந்தத்தை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டே இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் செயல்பாடுகள், கொள்கைகள், துன்புறுத்தல் அரசியல், பழிவாங்கும் அரசியல் ஆகியவற்றால், தேசத்துக்கு பேரழிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் மனசாட்சியை தட்டி எழுப்புவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டுள்ளோம் என்றாா் ஜெய்ராம் ரமேஷ்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையிலான இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை, ராகுல் காந்தி கடந்த செப்டம்பா் 7-ஆம் தேதி தொடங்கினாா். கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா (நூ, குருகிராம், ஃபரீதாபாத் மாவட்டங்கள்), தில்லி, உத்தர பிரதேசம் வழியாக இப்போது மீண்டும் ஹரியாணாவை அடைந்துள்ளது. ஜனவரி 30-இல் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடைப்பயணம் நிறைவுபெறவுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →