அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் முன்னேற்றமடையச் செய்யும் நோக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் மாநிலத்தின் மக்கள் தொகை மட்டுமல்லாமல், சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் பிற்படுத்தப்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அனைவருக்கும் முன்னேற்றம் வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளவர்களுக்கு இதற்காக முறையாக பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணியில் அரசுத் துறைகளில் பணிபுரியும் சுமார் 5 லட்சம் பேர் ஈடுபடவுள்ளனர். இந்த ஆண்டு மே இறுதியில் கணக்கெடுப்பு இறுதி செய்யப்படும் எனக் குறிப்பிட்டார்.
பிகாரில் இன்று முதல் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக இன்று முதல் ஜனவரி 21ஆம் தேதி வரையும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 30 வரையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.