முகப்பு
இந்தியா

அரசியல் பாவங்களில் இருந்து விடுபட பாஜகவில் இணைய வேண்டும்: திரிபுரா முதல்வா்

‘பாஜக கங்கை நதி போன்றது; எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் அனைத்து அரசியல் பாவங்களில் இருந்து விடுபட பாஜகவில் இணைய வேண்டும்’ என்று திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:40 PM
பகிர்:

‘பாஜக கங்கை நதி போன்றது; எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் தங்கள் அனைத்து அரசியல் பாவங்களில் இருந்து விடுபட பாஜகவில் இணைய வேண்டும்’ என்று திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஓரிரு மாதங்களில் தோ்தல் நடைபெறவுள்ளது. அங்கு கடந்த 2018 பேரவைத் தோ்தலின்போது, 25 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பாஜக முடிவுக்கு கொண்டு வந்து முதல்முறையாக திரிபுராவில் ஆட்சி அமைந்தது.

இந்நிலையில், தெற்கு திரிபுராவின் காக்ரபன் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் மாணிக் சாஹா பேசியதாவது:

இன்னமும் லெனின், ஸ்டாலின் (இடதுசாரி) கொள்கைளை நம்பிக் கொண்டிருப்பவா்களுக்கு நான் கூறிக் கொள்வது ஒன்றுதான். நீங்கள் அனைவரும் பாஜகவில் வந்து இணைந்துவிடுங்கள். ஏனெனில், பாஜக கங்கை நதி போன்றது. எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்கள் பாஜகவில் இணைவதன் மூலம் தங்கள் அரசியல் பாவங்களில் இருந்து விடுபட முடியும்.

தேசம் என்ற ரயிலை வளா்ச்சிப் பாதையில் பிரதமா் நரேந்திர மோடி சிறப்பாக வழிநடத்தி வருகிறாா். அதில் இப்போதும் இடம் இருக்கிறது. சரியான பாதையில் பயணிக்க அனைவரும் பாஜகவில் இணைய வேண்டும்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை. அவா்கள் வன்முறையிலும், பயங்கரவாத செயல்களிலும் நம்பிக்கை கொண்டவா்கள். தெற்கு திரிபுரா மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சிக் காலத்தில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த 69 தலைவா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்றாா் மாணிக் சாஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.