இந்தியா

இந்தூரில் 17வது வெளிநாடுவாழ் இந்தியர் தினத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு! 

IANS

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட பிரவாசி பாரதிய திவாஸில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை இந்தூர் வந்தடைந்தார். 

மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூரில் 17வது பிரவாசி பாரதிய திவாஸ்(வெளிநாடு வாழ் இந்தியர் தினம்) விழாவை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். 

பிரதமர் மோடியை முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா மற்றும் மாநில பாஜக தலைவர் வி.டி..சர்மா ஆகியோர் இந்தூர் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர். 

மேலும், விமான நிலையத்தில் மத்தியப் பிரதேச ஆளுநர் மங்குபாய் சி படேல் மற்றும் சில அமைச்சரவை அமைச்சர்களும் உடனிருந்தனர். 

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் செயல்களைப் போற்றும் வகையில் இந்த விழாவில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. 

பிரவாசி பாரதிய திவாஸ்(வெளிநாடுவாழ் இந்தியர் தினம்) வெளியுறவு அமைச்சகம் இந்த நாளை 2003 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி  7 முதல் 9 தேதிகளில் கொண்டாடுகிறது. பின்னர், 2015-ல் திருத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 

இந்த மாநாட்டில் வெவ்வேறு நாடுகளில் வாழும் 3,500 வெளிநாடு வாழ் இந்தியர்கள் கலந்துகொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT